‘நான் யாரையும் பயமுறுத்தல’… காயத்ரி ராகுராம் செய்தியாளர் சந்திப்பில் எழுந்த திடீர் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
29 October 2022, 2:09 pm

கோவை : பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பின் போது, கோவையில் பத்திரிக்கையாளர்களுடன் பாஜகவினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

gayathri raguram - updatenews360

பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்.

gayathri raguram - updatenews360

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த அவர்,
1998 குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை ஒப்பீடு செய்து கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ஆத்திரம் அடைந்தார்.

gayathri raguram - updatenews360

நான் யாரையும் பயமுறுத்தவில்லை, அச்சமடைய வைக்கவில்லை என்றும், தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். இதற்குப் பின் ஆத்திரமடைந்தவர் சத்தமாக பதில் அளித்தார்.

bjp - updatenews360

இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பாஜகவினர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.

  • ott company put condition to dhanush movie producer that put title in english தனுஷ் படத்தின் டைட்டிலில் மூக்கை நுழைக்கும் ஓடிடி நிறுவனம்? இப்படியா கண்டிஷன் போடுறது!