என் அப்பா இப்போ இருந்திருக்கணும்…பத்ம பூஷன் விருதை தட்டி சென்ற அஜித்…உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்..!

Author: Selvan
27 January 2025, 9:23 pm

நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் நடிப்பதை தாண்டி பல்வேறு துறைகளில் தன்னுடைய கால் தடத்தை பதித்து சாதனை புரிந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் துபாய் 24H கார் ரேஸில் தனது அணியுடன் கலந்து கொண்டு 3 வது இடத்தை பிடித்து அசத்தினார்.

அவரது வெற்றியை உலகம் முழுவதும் இருக்க கூடிய ரசிகர்கள் கொண்டாடியது மட்டுமின்றி,கார் பந்தயத்தில் இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.மேலும் அவருக்கு திரை பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த சூழலில் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.அதில் 7-பத்ம விபூஷண்,19 பத்ம பூஷன்,113 பத்ம ஸ்ரீ உட்பட மொத்தம் 139 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் கலைத்துறையில் நடிகர் அஜித்துக்கு ஒன்றிய அரசு பத்ம பூஷன் விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.இந்த அறிவிப்பால் நடிகர் அஜித் குமார் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளார்.

இதையும் படியுங்க: போலீசாரால் என் வாழ்க்கையை போச்சு…நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் நடந்த குளறுபடி…இளைஞன் பரபரப்பு பேட்டி..!

அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தன்னுடைய விடாமுயற்சியால் அவர் இந்த விருதை தட்டி பறித்துள்ளார்.இந்த விருது அவரது கடின உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.மேலும் நடிகர் அஜித் பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த விருதில் எனது பின்னால் பலரது உழைப்பு உள்ளது என கூறியுள்ளார்.மேலும் அவர் என்னுடைய தந்தை இப்போது இருந்தால் மிகவும் சந்தோசம் அடைந்திருப்பார்,எனது அம்மாவின் தியாகங்களுக்கும் அன்பிற்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் கடந்த 25 வருடமாக எனது மனைவி ஷாலினி எனக்கு மிகவும் பக்க பலமாக இருந்துள்ளார்,என்னுடைய குழந்தைகளுக்கும் நன்றி என கூறியுள்ளார்.

என்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் இதில் மிகப்பெரிய பங்கு உள்ளது என ரொம்ப எமோஷனல் ஆக பதிவிட்டுள்ளார்.நடிகர் சிவாஜிகணேசன்,கமல்ஹாசன்,ரஜினிகாந்த்,விஜயகாந்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் 5-வது முறையாக பத்ம பூஷன் விருதை மகுடம் சூட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!