கேரளாவில் பரவி வரும் மூளையைத் தின்னும் அமீபா; உஷாரான தமிழக அரசு

Author: Sudha
8 July 2024, 1:29 pm

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது வலைதள பக்கத்தில் கேரளமாநிலத்தில் நெக்லேரியா ஃபோலேரி என்னும் அமீபா பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிர் இழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் இத்தகைய பரவல்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

அசுத்தமான நீரில் பரவும் இந்த நோய் குழந்தைகளை அதிகம் அச்சுறுத்துவதால் மக்களின் உயிர் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன் என பதிவு செய்தார்.

கேரளாவில் மூளையைத் தின்னும் நெக்லேரியா ஃபோலேரி எனும் அமீபாவால் அமீபிக் மெனிங்கோ என்சபாலிடிஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழக அரசு இந்த நோய்க்கான சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அவர்களுக்கும் நோய் குறித்து கடிதம் அனுப்பப் பட்டுள்ளது.


நெக்லேரியா ஃபோலேரி என்று மூளையை தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சுகாதார வழிகாட்டுதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தேங்கியிருக்கும் நீரில் குளிப்பதை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும் மற்றும் நீர்நிலைகள் குளங்கள் ஏரிகளின் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

மூளையை தின்னும் தொற்றுநோய் உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தலைவலி,காய்ச்சல்,குமட்டல் வாந்தி குழப்பம் பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை நோயின் அறிகுறிகள் ஆகும் எனவே மக்களும் முன்னெச்சரிக்கையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?