பாஜகவில் போலி முகவர்கள்… அண்ணாமலை காலத்தில் மோசடி? புயலை கிளப்பும் நயினார் நாகேந்திரன்!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2025, 6:46 pm
பாஜகவின் பூத் முகவர்களில் பாதி போலி என்று அம்பலமாகி உள்ளது. 50% பேர் இல்லாத 50% பேரை இருப்பதாக கணக்கு காட்டியுள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
இது குறித்து பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷிடம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகார் மனு கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அண்ணாமலை காலத்தில் என்ன நடந்தது?
அண்ணாமலைக்கு விசுவாசமாக பணியாற்றிய சில நிர்வாகிகள், மற்ற தலைவர்களை மதிக்காமல் “நான் தான் ராஜா”ன்னு அலப்பறை பண்ணியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிர்வாகிகளை வெளியேற்ற நயினார் தீவிர திட்டம் தீட்டியிருக்கார்.
நயினார் நாகேந்திரன் சாதி, சமுதாய வேறுபாடு இல்லாம, எல்லா தரப்பினருக்கும் பாஜகவில் பதவிகளை வாரி வழங்க திட்டமிட்டுள்ளார். முந்தைய தலைமைக்கு விசுவாசமாக இருந்தவர்களையும் மாற்றி, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச முடிவு பண்ணியிருக்கார்.

இது மட்டுமா? சென்னையில் சில ரவுடிகள் கட்சியில் ஊடுருவியதாக வந்த புகார்களை வைத்து, அவங்களை கண்டுபிடிச்சு வெளியேற்றவும் நயினார் தீவிரமாக களமிறங்கியிருக்கார்!
பாஜகவின் நீண்ட கால கனவான பூத் கமிட்டி அமைப்பு, அண்ணாமலை காலத்தில் முழுமையாக நிறைவேறலையாம். இதை சரி செய்ய, 2026 மக்களவைத் தேர்தலை குறி வைத்து, நயினார் பூத் கமிட்டி பணிகளை ராக்கெட் வேகத்தில் துவக்கியிருக்கார்.
கட்சியின் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு – இவை எல்லாம் விரைவில் மாற்றப்படலாம்னு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
