மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாய் இருந்து மனைவி கொடூர கொலை : சிக்கிய ஜிம் மாஸ்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2025, 1:15 pm

மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின் சம்பவம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

ஒசூர் ஜூஜூவாடி உப்கார் ராயல் கார்டன் பகுதியில் பாஸ்கர் என்பவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இலர் ஓசூரில் 4 இடங்களில் ஜிம் கூடங்களை அமைத்து ஜிம் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.

இதையும் படியுங்க: ஜெயிலுக்கும், பெயிலுக்கும் அலையும் அமைச்சர்கள் ; CM சிறை செல்வார்.. அனல் பறக்க விட்ட பாஜக பிரமுகர்!

இவருடைய மனைவி சசிகலா, பெண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர்.

சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த தம்பதிக்கு இடையே விரிசலாக வந்தது கள்ளக்காதல். அடிக்கடி ஜிம் மாஸ்டர் பாஸ்கர், வேறு ஒரு பெண்ணுடன் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனால் குடும்பத்துக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி இரவு, மனைவிக்கு உடல்நலக்குறைவு என கூறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கணவர் பாஸ்கர்.

ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர், சசிகலா ஏற்கனவே இறந்துவிட்டார் என கூற, உடனே உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதே சமயம் மருத்துவமனை நிர்வாகம் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் பெங்களூருவில் இருந்து வந்த சசிகலா பெற்றோர், தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து பிரேத பரிசோதனையில் சசிகலா கழுத்தை நெறித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

Gym master caught brutally murdering wife

இதையடுத்து பாஸ்கரிடம் போலீசார் விசாரணையில் இறங்கிய போதுதான், திடுக் தகவல் வெளியானது. வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை மனைவி தினமும் கேட்டு தகராறு செய்ததால், சம்பவத்தன்று இருவரும் மது அருந்தினோம்.

சசிகலாவின் கை காலக்ளை கட்டிப்போட்டு உடலுறவில் ஈடுபட்டு. அப்படியே கழுத்த நெறித்து கொன்றதாகவும், உடலுறவின் போது மூச்சுத்திணறியதாக மருத்துவமனையில் அனுமதித்ததாக வாக்குமூலமம் அளித்தார்,. இதன் பேரில் பாஸ்கர் கைது செய்யப்பட்டான்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?
  • Leave a Reply