அடிமேல் அடி…!_ சகோதரனால் கை விட்ட நடிகர்…. மனைவி விட்ட சாபம்?

Author: Selvan
8 November 2024, 1:24 pm

சமீப காலமாக தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமாவிலும் அடிமேல் அடி வாங்கி வருகிறார் நடிகர் ஜெயம் ரவி. ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குவார் என ரசிகர்களே பரிதாபம் படும் நிலைக்கு தள்ளப்பட்டார் நடிகர் ஜெயம் ரவி.

தனி ஒருவன், அடங்கமறு, டிக் டிக் டிக், மிருதன் என தன்னுடைய கரியரில் உச்சத்தில் கொடி கட்டி பறந்த ஜெயம் ரவி திடீர் சரிவை சந்தித்து சினிமாவை விட்டு ஓடிரலாமா என்ற மன நிலைக்கு வந்துள்ளார்.

சமீபத்தில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு விலகி இருந்தார்.தான் சோகத்தில் இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் பொது இடங்களில் சந்தோசமாக இருப்பது போல் காட்டி கொண்டார்.

பூமி, சைரன், அகிலன், இறைவன் என்று தொடர்ந்து அடுத்தடுத்து பட தோல்விகளை சந்தித்தார்.

இப்பொழுது அந்த வரிசையில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த பிரதர் திரைப்படமும் சேர்ந்து விட்டது. பிரதர் திரைப்படம் தனுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த ஜெயம் ரவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 கோடிகளில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை வெறும் 8 கோடிகள் மட்டுமே வசூலித்துள்ளது.

ஒரு காலகட்டத்தில், தனி ஒருவன் ரிலீஸ் ஆன நேரத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் 25 கோடி ரூபாய் வரை உச்சத்தில் இருந்தது. ஆனால் இப்பொழுது அதல பாதாளத்திற்கு சென்று அவருடைய சம்பளம் வெறும் 4 கோடிகள் என்ற அளவில் இருக்கிறது.

இதையும் படியுங்க: கவர்ச்சி உடையில் மின்னும் நடிகை..குனிந்து பார்த்தால் தெரியும் டாட்டூ -ரசிகர்கள் குஜால்…!

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்வதில் ஜெயம் ரவிக்கு சறுக்கல்கள் இருந்து வருகிறது.

ஜெயம் ரவிக்கு பின்னால் வந்த ஹீரோக்கள் அனைவரும் இன்று அவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு உயர்ந்து விட்டனர். கவின், அசோக் செல்வன், ஹரிஷ் கல்யாண் போன்றவர்களது மார்க்கெட் கூட இன்று நல்ல நிலையில் இருக்கிறது.

ஆனால் பெரிய சினிமா பின்புலத்தை கொண்ட ஜெயம் ரவிக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. சோற்றிலும் அடி வாங்கியாச்சு சேற்றிலும் அடி வாங்கியாச்சு என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!