மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?
Author: Prasad5 May 2025, 5:37 pm
துணிச்சல் நடிகை
நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக ஜொலித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
இவர் வளர்ந்து வந்த காலகட்டத்தில் ஒரு முறை இவர் குளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. எனினும் மனம் தளராமல் தனது கெரியரை உச்சிக்கு கொண்டு போனார் திரிஷா. இவ்வாறு பல தடைகளை தாண்டி இப்போதும் டாப் நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசஃப் திரிஷா குறித்து ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

குடிச்சிட்டு ஆட்டம்போட்டாங்க…
அப்பேட்டியில் நிருபர், “ஒரு காலகட்டத்தில் திரிஷா குடித்துவிட்டு நடுரோட்டில் ஆட்டம் போட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதெல்லாம் உண்மையா?” என ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த சபிதா ஜோசஃப், “அப்படிப்பட்ட செய்திகளில் சில உண்மைகளும் இருக்கின்றன. அப்படிப்பட்ட செய்திகளை அவர் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் தன்னுடைய பப்ளிசிட்டி படிக்கட்டாக மாற்றிக்கொண்டார் அவர்.
அப்படிப்பட்ட செய்திகளை எழுதிய பத்திரிக்கைகளின் மேல் கோபத்தை காட்டாமல் அந்த பத்திரிக்கைகளே தன்னை பற்றி நல்ல விதமாக எழுதுவது போல் மாற்றிக்கொண்டார் அவர்” என்று கூறினார். இச்செய்தி இக்கால திரிஷா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.