வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்! 

Author: Prasad
16 June 2025, 1:36 pm

மோஸ்ட் வாண்டட் திரைப்படம்

2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதனை தொடர்ந்து வெற்றிமாறன் “அசுரன்”, “விடுதலை 1 மற்றும் 2” என மூன்று திரைப்படங்களை இயக்கிவிட்டார். 6 வருடங்களுக்கு மேல் ஆகியும் “வடசென்னை 2” திரைப்படம் தொடங்கப்படவில்லை.

vetrimaaran open statement about vadachennai part 2 movie

வெற்றிமாறன், தனுஷ் ஆகிய இருவரும் எந்த திரைப்பட விழாவிற்குச் சென்றாலும் ரசிகர்கள் “வடசென்னை 2” அப்டேட்டை குறித்து கேட்காமல் இருந்தது இல்லை. அவர்களும் அதற்கான சூழல் அமையும்போது நிச்சயம் வடசென்னை 2 தொடங்கும் என கூறுவார்கள். இவ்வாறு இத்தனை வருடங்களாக “வடசென்னை 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவே இல்லை.

வெளிப்படையாக கூறிய வெற்றிமாறன்

இந்த நிலையில் சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் வெற்றிமாறன். அப்போது விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல விஷயங்களை பேசினார். அந்த சமயத்தில் அங்கு இருந்த வீரர்கள் பலரும் “வடசென்னை 2” குறித்து அப்டேட் கேட்டனர்.

அதற்கு வெற்றிமாறன் சிரித்துக்கொண்டே “வடசென்னை 2 வரும்” என்று மட்டும் பதில் அளித்தார். வெற்றிமாறன் இவ்வாறு கூறியபோது விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கூச்சலிட்டனர்.

vetrimaaran open statement about vadachennai part 2 movie

வெற்றிமாறன் சூர்யாவை வைத்து “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இத்திரைப்படம் டிராப் என்று கூறப்படுகிறது. மேலும் அடுத்ததாக சிம்புவை வைத்து வெற்றிமாறன் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. 

  • prabhas starring the rajasaab movie teaser launched பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…
  • Leave a Reply