SSI கொல்லப்பட்ட போது தோட்டத்தில் தங்கியவர்கள் யார்? அதிமுக எம்எல்ஏ கிளப்பிய பகீர்.. திமுக அரசுக்கு கோரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2025, 2:26 pm
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் சண்முகவேல் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சந்தித்த மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரன் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மகேந்திரன் தனது தோட்டத்தை பராமரிக்கவில்லை எனவும் ஆட்கள் வைத்தே பராமரித்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் மூர்த்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்ததாகவும் அவரது மகன்கள் ஒரு மாதம் முன்பு தான் வந்துள்ளான்.

அனைவரது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்கள் காவல் துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது எனவும் உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மகன் லலித்குமார் படித்துள்ளார்.

பணியில் இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளரின் மகனுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
