வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசிக்கு இந்தியா தயார்….அப்படி என்றால் என்ன???

22 May 2020, 4:54 pm
Nitin Gadkari says India ready for vehicle scrappage policy. What it means
Quick Share

மத்திய  அமைச்சர் நிதின் கட்கரி வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசி குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த திட்டம் மூலமாக அடுத்த ஐந்து வருடத்தில் இந்திய மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிக்கும் தளமாக மாறி விடும் என அவர் கூறுனார். “இப்போது நாம் புதிய ஸ்கிராப்பேஜ் திட்டத்தை தொடங்க உள்ளோம். இதன் மூலமாக பழைய டிரக், பேருந்து மற்றும் கார்கள் ஆகிய அனைத்தின் பாகங்களும் முழுவதுமாக பிரிக்கப்படும். 

இந்த புதிய திட்டத்திற்காக அரசு இந்தியாவின் போர்டுகளின் ஆழத்தை 18 மீட்டர் வரை அதிகப்படுத்த போவதாகவும் கூறினார். இதனால் மறுசுழற்சி செய்யும் ஆலைகளை போர்ட்டுகளுக்கு அருகில் அமைத்து கொள்ளலாம். இது போன்ற மறு சுழற்சி செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தும் போது கார், டிரக் மற்றும் பேருந்துகள் தயாரிக்க தேவைப்படும் செலவு குறையும். இதனால் சர்வதேச சந்தையில் இந்தியாவின் மதிப்பு உயரும். 

“இன்னும் ஐந்து வருடங்களில் கார், டிரக் மற்றும் பேருந்துகள் தயாரிக்கும் முதன்மை மையமாக இந்தியா மாறி விடும். எத்தனால், மெத்தனால், பயோ CNG, LNG, எலக்ட்ரிக், ஹைட்ரஜன் எரிவாயு ஆகிய அனைத்தின் மூலமாகவும் வாகனங்கள் தயாரிப்பதில் இந்தியா முதல் இடம் வகிக்கும்.” என்று கட்கரி கூறுகிறார்.

இதனை MIT ADT பல்கலை கழகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுடன் வீடியோ கான்ஃபெரன்சிங்கில் உரையாடிய போது பேசினார். இந்த வாகன ஸ்கிராப்பேஜ் பாலிசிக்கான விதிமுறைகளை அக்டோபர் 2019 யில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு இது குறித்த பல வேலைகள் செய்ய வேண்டி இருந்ததாகவும் நிதின் கட்கரி கூறினார். இந்த தொழிலில் நுழைய என்ன மாதிரியான கட்டட அமைப்பு தேவை, என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் ஆகியவை அந்த விதிமுறைகளில் கொடுக்கப்பட்டு இருந்தன.

Leave a Reply