புதிய சாதனை படைத்துள்ள டெஸ்லா நிறுவனம்… செம ஹேப்பியாக இருக்கும் எலான் மஸ்க்!!!

Author: Hemalatha Ramkumar
26 October 2021, 3:46 pm
Quick Share

எலோன் மஸ்க்கின் டெஸ்லா இப்போது பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்! அதன் சந்தை மூலதனம் அதிகாரப்பூர்வமாக முதன்முறையாக $1 டிரில்லியனைத் தாண்டிய நிலையில், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், அமேசான் மற்றும் ஃபேஸ்புக் போன்ற அதே நிறவன வரிசையில் இப்போது டெஸ்லா உள்ளது.

பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள டெஸ்லா கார்களை வாங்குவதற்கான ஹெர்ட்ஸ் குளோபல் ஹோல்டிங்கின் அறிவிப்புடன், கடந்த வாரத்தில் வலுவான வருவாயைப் பதிவுசெய்த பிறகு, எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் தயாரிப்பாளர் பங்குச் சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.

டெஸ்லா: அடுத்த தொழில்நுட்ப ஜாம்பவான்:
திங்கட்கிழமை மதியம், தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் $1,036.63 விலையை எட்டியது மற்றும் $1,025 உடன் முடிவடைந்தது. சந்தை மூடுவதற்கு முன், மதிப்பீடு $1.01 டிரில்லியனை எட்டியது. ஃபேஸ்புக்கும் இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 டிரில்லியன் கிளப்பில் இணைந்தது. அதன்பிறகு, அதன் மதிப்பீடு 927 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

இந்த சாதனையின் மூலம், டெஸ்லா $1 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்க ஆறாவது நிறுவனமாகும். இந்த ஆண்டு ஜனவரி முதல், டெஸ்லாவின் பங்குகள் 40 சதவீதம் அல்லது $300 மதிப்பிற்கு மேல் வளர்ந்துள்ளன.

ஃபார்ச்சூன் படி, டெஸ்லா நிறுவனம் மூன்றாம் காலாண்டில் 240,000 வாகனங்களை டெலிவரி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் வழங்கியதை விட தோராயமாக 70% அதிகம்.
டெஸ்லா தனது ஷாங்காய் தொழிற்சாலையில் டெஸ்லா மாடல் ஒய் உற்பத்தியை அதிகப்படுத்தியதன் மூலம் இந்த இலக்கை அடைய முடிந்தது என்று டெஸ்லா கூறுகிறது.

Views: - 249

0

0