இலங்கையில் புதிய திருப்பம்.. ஜனாதிபதி பதவிக்கு மூன்று பேர் போட்டி : நாடாளுமன்றத்தில் சற்று முன் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 10:38 am
Srilanka President - Updatenews360
Quick Share

ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தேர்வு செய்வதற்கான வேட்புமனுக் கோரல் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி வேட்பாளராக டலஸ் அழகப்பெருமவை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிய, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அதனை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை, தினேஷ் குணவர்தன முன்மொழிய மனுஷ நாணயக்கார அதனை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக அனுரகுமார திசாநாயக்கவை, விஜித ஹேரத் முன்மொழிய ஹரினி அமரசூரிய அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, அதனை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக் கொண்டதையடுத்து சபை அமர்வுகள் நாளை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை காலை 10 மணிக்கு இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க சபையில் அறிவித்தார்.

Views: - 479

0

0