மேடையில் பேசும் போது பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு… அதிர்ச்சி சம்பவம்: வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2023, 11:34 am

ஜப்பான் நாட்டில் வகாயாமா நகரில் அந்நாட்டு பிரதமர் புமியோ கிஷிடா மக்கள் மத்தியில் தனது பேச்சை தொடங்குவதற்கு சற்று முன், திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

இதனை அடுத்து, பிரதமர் புமியோ கிஷிடா அந்த இடத்தில் இருந்து பத்திரமாக பாதுகாவலர்கள் உதவியுடன் வெளியேற்றப்பட்டார். அந்நாட்டு பத்திரிகை தகவலின் படி, பைப் வெடிகுண்டு ஒன்று பிரதமர் புமியோ கிஷிடா மீது வீசப்பட்டது.

ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளருடன் அக்கட்சி தலைவரும்ம், பிரதமருமான் புமியோ கிஷிடா பேசிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, 65 வயதான பிரதமர் புமியோ கிஷிடாபாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார், மேலும் அவர் காயமின்றி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், பைப் வெடிகுண்டை வீசிய குற்றவாளியை பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகளால் உடனடியாக கைது செய்யப்பட்டார். பல சமூக ஊடக தளங்களில் இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!