ஆப்கனை உலுக்கிய நிலநடுக்கம்… இடிந்து விழுந்த குடியிருப்புகள்… 250க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Author: Babu Lakshmanan
22 June 2022, 2:52 pm

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பக்டிகா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நில அதிர்வால், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

அவர்களில் முதற்கட்டமாக 255 பேர் உயிரிழந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பல வெளியேறிவிட்டனர். இதனால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. அனைத்து தொண்டு நிறுவனங்களும் உதவி செய்யும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?