இலங்கையில் 100 நாட்களுக்கு பின் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம் திறப்பு : போராட்டம் நடத்த மக்களுக்கு தடையில்லை என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2022, 8:42 am
Lanka President Office -Updatenews360
Quick Share

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரிசி, காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உச்சத்தில் உள்ளன. இதனால் கடும் அவதிக்கு ஆளான மக்கள், அரசுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு கைப்பற்றினர். போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கிஇருந்தனர். அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தப்பி ஓடிய நிலையில், அடுத்த சில நாட்களில் தன் பதவியையும் ராஜினாமா செய்தார்.இதைத் தொடர்ந்து, அதிபராக ரணில் விக்ரமசிங்கே, பிரதமராக தினேஷ் குணவர்த்தனே ஆகியோர் பதவியேற்று உள்ளனர்.

இந்நிலையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் துவங்கின. பள்ளிகள் திறப்புராணுவம் மற்றும் போலீஸ் இணைந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர்.

சீரமைப்பு பணிகள் முடிந்து அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவை இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் மாளிகையில் இருந்து ஏராளமான கலைப் பொருட்கள் காணாமல் போயுள்ளன என்றும், அவற்றை எடுத்துச் சென்றவர்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து தேடும் பணி நடப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் தீவிர போராட்டத்தால், 100 நாட்களுக்கும் மேலாக அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகங்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கிக் கிடந்தன.

போராட்டம் காரணமாக இலங்கையில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துாதரக அதிகாரிகள் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, வெளிநாட்டு துாதரக அதிகாரிகளை அழைத்து, அதிபர் ரணில் விக்ரமசிங்கே விளக்கம் அளித்தார்.

”அமைதியான முறையில் பொதுமக்கள் கூடுவதற்கும், தங்கள் எதிர்ப்புகளை தெரிவிப்பதற்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை,” என, அவர் விளக்கம் அளித்தார்.

Views: - 1297

0

0