என்னிடம் எத்தனை மச்சம் இருக்குனு சொல்ல முடியுமா? பாலியல் புகார் அளித்த விமானப் பணி பெண்ணுக்கு எலான் மஸ்க் சவால்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 4:09 pm

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனி விமானத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பயணித்த எலான் மஸ்க், அங்கிருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

தனி அறையில் விமான பணிப்பெண் முன்பு ஆடையின்ஸ் மஸ்க் நின்றதாகவும், அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தனது தோழியின் முன்பு நான் என்னை வெளிப்படுத்தினேன் என்று கூறும் இந்த பொய்யருக்கு ஒரு சவால்.

எனது உடலில் உள்ள பொதுமக்களக்கு தெரியாத ஒரு அடையாளத்தை மட்டும அவர் தெரிவிக்க வேண்டும். ஆனால் நிச்சயமாக அவரால் அப்படி செய்ய முடியாது. ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சிகள் உள்ளவருமான எலான் மஸ்க், ஜோ பைடனின் ஜனநாயக கட்சிக்கு பதிலாக ட்ரம்பின் குடியரசு கட்சிக்கு இனி வாக்களிக்க போவதாக கூறியுள்ளார்.

விமான பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டு, அரசியல் ரீதியான உந்துதலைப் பெற்ற ஒரு மோசமான தந்திர பிரச்சாரம் என அவர் கூறியுள்ளார்.

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே