ட்விட்டர் பயனாளர்களின் அடிமடியில் கை வைத்த எலான் மஸ்க்… வெளியான ஷாக் அறிவிப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 10:46 am

டேட்டா ஸ்கிராப்பிங், தகவல் ஆளுகைக்காக பயனர்களுக்கு தற்காலிக வரம்புகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.

அதன்படி, ட்விட்டரில் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் (Verified Accounts) ஒரு நாளைக்கு 10,000 பதிவுகளையும், பிற பயனர்கள் 1000 பதிவுகளையும், புதிய பயனர்கள் 500 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற தரவுகளை ஒழிப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.

முதலில், சரிபார்க்கப்பட்ட கணக்கு உள்ள பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 பதிவுகளைப் பார்க்கலாம். சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 600 ட்விட்களைப் பார்க்கலாம். புதிதாக கணக்கு தொடங்கிய பயனர்கள் ஒரு நாளைக்கு 300 இடுகைகளை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!