பப்புவா நியூ கினியா நாட்டில் கடும் நிலச்சரிவு : கொத்து கொத்தாக சிக்கி உயிரிழந்த மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2024, 4:29 pm
papua
Quick Share

தென் மேற்கு பசுபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா.இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம்( மே 24) நிலச்சரிவு ஏற்பட்டது.

அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

கிராமத்திற்கு செல்லும் சாலையும் பாதிக்கப்பட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐ.நா., அதிகாரி ஒருவர், நிலச்சரிவில் 150 வீடுகள் மண்ணில் புதைந்து தரைமட்டமானது. பலியானோரின் எண்ணிக்கை 670 ஐ தாண்டியதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அந்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாலும், தண்ணீர் வடிவதாலும் மீட்பு பணியில் ஈடுபடுவது பெரும் சவாலாக உள்ளது. மீட்பு பணியில் ஈடுபடுவோர்கள், குச்சிகள், விவசாய உபகருணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: அரசு மாணவர்களுக்கு லேப்டாப் எங்கே? இந்த ஆண்டும் நொண்டிச்சாக்கு சொல்வீங்களா? திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி!

நிலச்சரிவு காரணமாக 1000த்திற்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது பெரிய சவாலாக உள்ளதாக ஐ.நா., அதிகாரி கூறியுள்ளார்.
இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.

Views: - 320

0

0