‘நியோகோவிட்’ வைரஸ்…மூன்றில் ஒருவர் உயிரிழக்க வாய்ப்பு: தடுப்பூசி போட்டாலும் வைரஸ் பரவும் அபாயம்?…எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Author: Rajesh
28 January 2022, 6:05 pm
Quick Share

நியோகோவிட் எனும் அதிக பரவும் தன்மை கொண்ட கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

வுஹானைச் சேர்ந்த சீன விஞ்ஞானிகள் குழு ஒன்று, NeoCoV என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி தெரிவித்துள்ளது. இந்த தொற்று வகை, அதிக இறப்பு மற்றும் தொற்று விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது. ஸ்புட்னிக் அறிக்கையின்படி, நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறியான MERS-COV உடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. NeoCoV முதலில் தென்னாப்பிரிக்காவில் வௌவால்களில் கண்டறியப்பட்டது. பின்னர் அது விலங்குகளிடையே பரவியது என கூறப்படுகிறது.

NeoCoV மற்றும் அதன் நெருங்கிய வகையான PDF-2180-CoV ஆகியவை உடலில் நுழைவதற்கு சில வகையான பேட் Angiotensin-converting enzyme2 (ACE2) மற்றும் மனித ACE2 ஆகியவற்றைப் பயன்படுத்தும் திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு பிறழ்வு வைரஸ் மனித உயிரணுக்களுக்கு பரவுவதற்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. சீன அறிவியல் அகாடமியின் வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் பயோபிசிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இந்த வெளிப்பாட்டை செய்துள்ளார். புதிய ஆய்வு இன்னும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வுஹான் விஞ்ஞானிகள் NeoCoV MERS-CoV-ல் உயிர் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்றும், இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்ட மூவரில் ஒருவர் இறக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸை விட அதிக பரிமாற்ற வீதம் இருக்கும் என்றும் கூறியுள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது.

Views: - 905

0

0