உடல்நலக்குறைவால் பாக்., முன்னாள் அதிபர் காலமானார் : ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை கைப்பற்றியவர் பர்வேஷ் முஷ்ரப்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 February 2023, 12:58 pm
Parvez - Updatenews360
Quick Share

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷ்ரப் காலமானார். அவருக்கு வயது 79. உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலே முஷரப் துபாயில் வசித்து வருகிறார்.

1999- ஆம் ஆண்டு ராணுவ தளபதியாக இருந்து ஆட்சியை பர்வேஷ் முஷரப் பாகிஸ்தானில் கைப்பற்றியவர் ஆவார்.

Views: - 534

0

0