மரியுபோலில் ரஷ்ய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணி உயிரிழப்பு : வயிற்றில் இருந்த குழந்தையும் பலி… உக்ரைனின் அடுத்த சோகம்!!

Author: Babu Lakshmanan
14 March 2022, 5:41 pm

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் காயமடைந்த கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ரஷ்யப் படைகள் கடந்த 10ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பெரும்பாலான நகரங்களை ரஷ்யா கைப்பற்றி விட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இன்றும் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தத் தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்தத் தாக்குதலில் கர்ப்பிணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், அந்தப் பெண்ணை உக்ரைன் ராணுவத்தினர் ஸ்டெரச்சரில் வைத்து கொண்டு சென்ற புகைப்படம் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், இன்று உயிரிழந்து விட்டதாகவும், வயிற்றில் இருந்த குழந்தையும் பலியாகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மரியுபோல் பகுதியில் மட்டும் ரஷ்ய படைகள் நடத்தப்பட்ட தாக்குதலில் 2க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?