உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துங்கள்…ரஷ்யா படைகளுக்கு உத்தரவிட்ட புதின்: திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்..!!

Author: Rajesh
5 March 2022, 12:54 pm
Quick Share

கீவ்: உக்ரைனில் 10வது நாளாக கடுமையான தாக்குதலை நடத்தி வந்த ரஷ்ய படைகளிடம் தாக்குதலை நிறுத்தும்படி ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 10வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய படைகள் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், அந்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் பலர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

Image

ஆயிரக்கணக்கான இந்தியர்களும் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். கடும் சவால்களை கடந்து அண்டை நாடுகளுக்கு உக்ரைனில் இருந்து பலர் நடந்தே செல்லும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில், மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு மூலம் உக்ரைனில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் நாடு திரும்ப வழி ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

Views: - 1555

0

0