ராணுவ வீராங்கனையை கொன்று நிர்வாணப்படுத்திய பாலஸ்தீனர்கள்.. ஷாக் வீடியோ : இஸ்ரேலில் உச்சக்கட்ட பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2023, 6:43 pm

ராணுவ வீராங்கனையை கொன்று நிர்வாணப்படுத்திய பாலஸ்தீனர்கள்.. ஷாக் வீடியோ : இஸ்ரேலில் உச்சக்கட்ட பரபரப்பு!!

இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இதில் காசா எனும் பகுதி பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒரு காலத்தில் இந்த காசா இஸ்ரேல் வசம் இருந்த நிலையில் தற்போது அதனை மீண்டும் கைப்பற்ற அந்நாடு முயற்சி செய்கிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் தான் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதற்கிடையே தான் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையில் இந்த மோதல் உச்சமடைந்து போராக உருமாறி உள்ளது.

அதாவது இன்று அதிகாலையில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களை தொடங்கியது. வெறும் 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள் மூலம் பாலஸ்தீனியர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 20க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் பாராசூட் மூலம் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதிகள் Al-Aqsa Flood ஆபரேஷன் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தான் போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. Operation Iron Swords என்ற பெயரில் வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் இருக்கும் இடத்தை கண்டறிந்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனியர்கள் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கிய நிலையில் ஒரு ஷாக் வீடியோ வெளியாகி உள்ளது.

அதாவது இஸ்ரேலின் பெண் ராணுவ வீராங்கனையை கொன்ற பாலஸ்தீனியர்கள், அவரை நிர்வாணப்படுத்தி மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

  • manikandan rajesh sobhithaseparation சினிமா பிரபலங்களுக்கு என்ன ஆச்சு…விவாகரத்து வாங்கிய பிரபல நடிகை…!
  • Views: - 802

    0

    0