அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி கலாச்சாரம்: நைட் கிளப்பில் மர்மநபர் வெறிச்செயல்…2 பேர் பலி..!!

Author: Rajesh
11 April 2022, 9:38 am
Quick Share

அயோவா: அமெரிக்காவில் நைட் கிளப் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.

சிடார் ரேபிட்ஸ்-ல் உள்ள நைட் கிளப்பில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.27 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

Views: - 881

0

0