நாளை 73வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்: கோவையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை..!!

Author: Rajesh
25 January 2022, 9:52 am

கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கோவையில் வ.உ.சி மைதானத்தில் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவி வழங்க உள்ளார்.

கொரோனா தொற்று அச்சம் உள்ளதால் குறைந்த அளவிலான பார்வையாளர்களை கொண்டு விழா நடைபெற உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 2000 பேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே நாளை நடைபெற உள்ள அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை முதல் வ.உ.சி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  • Ravi Mohan married for the second time? Video goes viral on the internet! 2வது திருமணம் செய்த ரவி மோகன் ? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!