கொரோனா தொற்று பாதித்த கைதி தப்பியோட்டம்: கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

Author: Rajesh
29 January 2022, 11:18 am

கோவை: கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் நல்லாம்பாளையம்,டவுன்ஹால், ரயில்நிலையம் ஆகிய இடங்களில் 4 சிறிய கோயில்கள் அடுத்தடுத்து சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இரு பிரிவுகள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் கஜேந்திரன் மீது பதிவு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கோவை மத்திய சிறையில் கஜேந்திரன் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த 27 ம் தேதி கொரொனா காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு சிறை கைதிகளுக்கான வார்டில் இருந்து கஜேந்திரன் தப்பி ஓடினார். தகவலறிந்த காவல்துறையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்திய நிலையில், இது குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?