நாட்டின் 85வது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்..!!

Author: Rajesh
30 January 2022, 8:28 am

புதுடெல்லி: ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இது 85வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும். இந்தியாவில் தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கொரோனா தடுப்பூசிகள் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…