5 மாநில தேர்தல்: பிப். 11 வரை பேரணிகளுக்கான தடை நீட்டிப்பு

Author: kavin kumar
31 January 2022, 10:14 pm

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பேரணிகளுக்கு பிப். 11 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற உள்ள 5 மாநிலங்களில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார். அதன்படி, உள்ளரங்குகளில் அதிகபட்சம் 500 பேர் வரையிலும், திறந்தவெளி கூட்டங்களில் 1000 பேர் வரையிலும் பங்கேற்கலாம் என்றும், வீடு வீடாக பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10ல் இருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், ரோட்ஷோ, பாதயாத்திரைகள், சைக்கிள், பைக், வாகன பிரசாரம் மற்றும் ஊர்வலங்கள் எதுவும் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • good bad ugly movie is loss to producer குட் பேட் அக்லி செம கலெக்சன், ஆனா நஷ்டம்? குட்டையை குழப்பிய பிரபலம்