20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது கொரோனா… தமிழகத்தின் இன்றைய நிலவரம்..?

Author: kavin kumar
31 January 2022, 9:00 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 19,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 22, 238 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 20 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதிசெய்யப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 33,45,220 ஆக பதிவாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 25,056 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31 லட்சத்து 9 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,564 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2897 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 2456 பேருக்கும், செங்கல்பட்டில் 1430 பேருக்கும், திருப்பூரில் 1425 பேருக்கும், சேலத்தில் 1101 பேருக்கும், ஈரோட்டில் 1070 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 1629

0

0