முட்டை லாரியில் ஆவணம் இல்லாத ரொக்கம் ரூ1.85 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை…

Author: kavin kumar
3 February 2022, 3:34 pm

திருச்சி : திருச்சி அருகே உரிய ஆவணங்கள் இன்றி முட்டை லாரியில் கொண்டு வரப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தொட்டியம் தாலுகாவில் தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள காட்டுப்புத்தூர் பகுதியில் பறக்கும்படை அலுவலர் உமாராணி தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியே முட்டை லாரி ஒன்று வந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, உரிய ஆவணங்கள் இல்லாமல் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தவநிலவன் என்பவரிடம் ரூபாய் 1 லட்சத்தி 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருந்துள்ளது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து முசிறி கோட்டாட்சியர் மாதவனிடம் ஒப்படைத்தனர். அவரது வழிகாட்டுதலின்படி பணம் சரிபார்க்கப்பட்டு தொட்டியம் கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?