மும்பையில் முடங்கியது ‘ஜியோ’ நெட்வொர்க்: இணைய சேவையின்றி தவிக்கும் வாடிக்கையாளர்கள்…!!

Author: Rajesh
5 February 2022, 6:04 pm

மும்பை: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியுற்றுள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவன சிம் கார்டுகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மும்பை பயனர்களில் பெரும்பாலானோர் தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணைய சேவையை பயன்படுத்துவதில் சிரமம் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தெரிவித்துள்ளனர். ‘Not Registered on Network’ என தங்களது மொபைல் போனில் வருவதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்காமல் உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?