நெடுஞ்சாலை பட பாணியில் லாரியின் தார்பாய் கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு : 5 பேர் கைது

Author: kavin kumar
6 February 2022, 2:24 pm

திருச்சி : சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் தார்ப்பாயை கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றபோது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் 36 பெட்டி அடங்கிய மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த செல்வம்(36) சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்கள் திருட்டில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன்(48),

கீரனூர் பழனிச்சாமி (40), அரக்கோணம் தங்கபாண்டியன் (24), மாதவரம் கிரி(40) உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடி மதுபாட்டில்களை விற்பனை செய்ததில் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் மீதமிருந்த 103 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாரை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?