இன்றைக்கும் இப்படியா?…95 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்..!!

Author: Rajesh
7 February 2022, 8:06 am

சென்னை: சென்னையில் 95 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில், கடந்த 95 நாட்களாக விலையில் மாற்றமின்றி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், 95வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?