தேர்தல் பிரச்சாரம் விறுவிறு: கோவை 38வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷர்மிளா சந்திரசேகர தீவிர வாக்குசேகரிப்பு…மக்கள் உற்சாக வரவேற்பு..!!

Author: Rajesh
7 February 2022, 8:45 am
Quick Share

கோவை : கோவையில் 38வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஷர்மிளா சந்திரசேகர் இன்று வடவள்ளி இந்திரா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறைவு பெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இதில் கோவை மாநகராட்சி 38வது வார்டில் அதிமுக சார்பில் டாக்டர்.ஷர்மிளா சந்திரசேகர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த சூழலில், அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 38வது வார்டுக்கு உட்பட்ட பொம்மனாம்பாளையம் பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து தனக்கு ஆதரவு திரட்டினார். மேலும் , வடவள்ளி இந்திரா நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்ற அவர் தனக்கு ஆதரவு கோரினார்.

அவருக்கு வழிநெடுக பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சந்திரசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Dr Sharmila Chandra sekar

Views: - 411

1

0