தேசியகொடிக்கு பதில் காவி கொடி ஏற்றிய மாணவர்கள்: கர்நாடகாவில் வெடிக்கும் அடுத்தடுத்த சர்ச்சை!!

Author: Rajesh
8 February 2022, 3:41 pm

கர்நாடகா: சிவமோகா பகுதியில் உள்ள கல்லூரியில் மாணவர்கள் குழு ஒன்று தேசியகொடிக்கு பதிலாக காவி ஏற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக சமீப காலமாகவே சில புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில், மங்களூருவில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வருவதற்கு எதிராக சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதன் காரணமாக, கல்லூரிகளுக்கு வரும் இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள், குல்லா, ஹிஜாப், பருதா, புர்கா போன்றவை அணிந்து வரதடை விதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், உடுப்பியில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

https://twitter.com/i/status/1490962928031309825

இந்த விவகாரம் கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களிலும் எதிரொலித்தது. முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ஹிந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லுாரிக்கு வரத் துவங்கினர். மாணவர்களுக்கு ஆதரவாக, ஹிந்து மாணவியரும் காவி சால்வை அணிந்து வந்தனர்.

இந்நிலையில், உடுப்பி குந்தாப்பூரில் உள்ள அரசு கல்லுாரியை சேர்ந்த முஸ்லிம் மாணவியர் நேற்றும் பர்தா அணிந்து கல்லுாரிக்கு வந்தனர். இவர்களை உள்ளே அனுமதிக்க கல்லுாரி முதல்வர் மறுத்தார். அவர்கள் கல்லுாரி வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அந்த மாணவியர் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தனி வகுப்பறையில் அமர வைக்கப்பட்டனர். மேலும் இரண்டு கல்லுாரிகளில் இந்த விவகாரம் தொடர்பாக பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, கல்லுாரி நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகள் கிளம்பி கொண்டிருக்கும் நிலையில், சிவமோகா மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் குழு ஒன்று தேசியக்கொடிக்கு இருக்க வேண்டிய கொடிக்கம்பத்தில் காவி கொடி ஏற்றிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?