கொலம்பியாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: நிலச்சரிவில் சிக்கிய குடியிருப்பு பகுதிகள்..14 பேர் பலி..!!

Author: Rajesh
9 February 2022, 10:18 am

பெரேரா: கொலம்பியாவில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. நிலச்சரிவை சற்றும் எதிர்பார்க்காத மக்கள் நிலச்சரிவில் சிக்கினர்.

அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?