சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்… காரில் இருந்து சட்டென்று இறங்கிய சோனு சூட்… தூக்கிச் சென்று உயிர்கொடுத்த ரியல் ஹீரோ..!!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
9 February 2022, 5:42 pm

பஞ்சாப் அருகே விபத்தில் சிக்கிய 19 வயது இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நடிகர் சோனு சூட்டிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்த உதவிகளால் இந்தியாவையே தனது பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் சோனு சூட். ஏழை குடும்பத்தினருக்கான கல்வி உதவி, விவசாய குடும்பத்திற்கு உதவி என சமூக வலைதளங்கள் மூலம் தனக்கு வரும் அனைத்து உதவிகளையும் அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

அவரது உதவும் மனப்பான்மையை அறிந்த பொதுமக்கள், அவரது வீட்டை ஒரு அரசு அலுவலகம் போல நினைத்து, தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி நாள்தோறும் கொடுத்து வருகின்றனர். அதனைப் பெற்று வரும் நடிகர் சோனு சூட்டும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். உதவும் மனம் கொண்ட அவரது செயல்களைப் பாராட்டி ஐக்கிய நாடுகளின் சபை கூட, சிறந்த மனிதநேயமிக்க விருதை வழங்கி கவுரவித்தது.

இந்த நிலையில், பஞ்சாபில் நடந்த ஒன்று விபத்தின் போது, தான் ஒரு ரியல் ஹீரோ என்பதை மீண்டும் ஒருமுறை சோனு சூட் நிரூபித்துள்ளார்.

மோகா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியதை, காரில் சென்று கொண்டிருந்த நடிகர் சோனு சூட் பார்த்துள்ளார். உடனே தனது காரை நிறுத்தச் சொல்லி, இறங்கிச் சென்று, விபத்தில் சிக்கிய காருக்குள் சுயநினைவின்றி கிடந்த 19 வயது இளைஞரை மீட்டுள்ளார். அவரே அந்தக் காருக்குள் சென்று இளைஞலைர தனது இரு கைகளால் தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…