இணையத்தை கலக்கும் அஜித்தின் புதிய கெட்டப்…! கொண்டாடும் ரசிகர்கள்..!

Author: Rajesh
11 February 2022, 4:16 pm

அஜித்தின் வலிமை படம் வரும் 24 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக மதுரையில் மட்டும் 45 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் மட்டுமே வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Valimai Release Date- Updatenews360

மேலும் வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதில் தமிழில் வெளியான டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Valimai Ajith Madurai -Updatenews360

சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர். இந்தி டிரெய்லரை இந்தி சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கனும், தெலுங்கு டிரெய்லரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் எச். வினோத் மற்றும் அஜித், வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கின் போது சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் வினோத் உடன் ஆடியோக்ராபர் ராஜா கிருஷ்ணன் உள்ளார். அஜித், இந்த புகைப்படத்தில் நீண்ட தாடியுடன் சால்ட் ரூ பெப்பர் லுக்கில் காட்சியளிக்கிறார்.

  • coolie movie aamir khan role update announced சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!