3 மாநில சட்டசபைத் தேர்தல் : வாக்குப் பதிவு எத்தனை சதவிகிதம் தெரியுமா..?

Author: kavin kumar
14 February 2022, 10:38 pm
Election Commision
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் 55 தொகுதிகளில் நடைபெற்ற 2 ஆம் கட்ட தேர்தலில், 61.20% வாக்குகளும், கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் 78.55% வாக்குகளும், உத்தரகாண்டில் 59.51% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

70- தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கும், 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கும் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல், 403 -தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 55 தொகுதிகளில் மட்டும் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. உத்தரபிரதேசம், கோவாவில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அதேவேளை, உத்தரகாண்டில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கோவாவில் 78.55 சதவீத வாக்குகளும், உத்தரகாண்டில் 59.51 சதவீத வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் 61.20 சதவீத வாக்குகளும் பதிவாகியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்தபின்னர், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Views: - 817

0

0