45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது: சென்னை மக்கள் செம ஹேப்பி..!!

Author: Rajesh
16 February 2022, 8:54 am

சென்னை: 45வது புத்தக கண்காட்சி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். சென்னையில் இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறந்திருக்கும் நிலையில், புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை புத்தக கண்காட்சி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது.

இந்த 45வது புத்தக கண்காட்சியை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த புத்தக கண்காட்சி இன்று முதல் வருகிற மார்ச் 6ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. 790 அரங்குகளில் சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கின்றன.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?