பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்..!!

Author: Rajesh
16 February 2022, 9:37 am
Quick Share

புதுடெல்லி: பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

இந்தியாவில் 80 மற்றும் 90களில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்திய இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹிரி உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனையில் இருந்த லஹிரி நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மும்பை கிரிட்டிகேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பப்பி லஹிரி 1973ம் ஆண்டு நன்ஹா சிகாரி என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் 1985ம் ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் பப்பி லஹிரி என்பது குறிப்பிடத்தக்கது. பப்பி லஹரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Views: - 886

0

0