I AM A DISCO DANCER புகழ் இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார் : அடுத்தடுத்து நிகழும் பிரபலங்களின் மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 11:17 am
Bappi Lahari- Updatenews360
Quick Share

பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், மூத்த பாடகருமான பப்பி லஹிரி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல மூத்த பாடகரும் மற்றும் பாலிவுட் இசையமைப்பாளருமான பப்பி லஹிரி உடல்நலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார்.மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர் காலமானார்.அவருக்கு வயது 69.

லஹிரி ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கட்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் செவ்வாய்க்கிழமை மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில்,நேற்று நள்ளிரவில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,பப்பி லஹிரி மறைவுக்கு திரைத்துறையினர் ,ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாப்பி டா என்று அன்புடன் அழைக்கப்படும் அவர்,1973 ஆம் ஆண்டு நன்ஹா சகாரி என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக,தமிழில் 1985 ஆண்டு வெளியான பாடும் வானம்பாடி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து,லஹிரி 2014 இல் பாஜகவில் சேர்ந்தார். அவர் 2014 இந்திய பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் (லோக்சபா தொகுதி) யில் இருந்து பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு,தேர்தலில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்பிபி இந்த ஆண்டு பழம்பெரும் பாடகி லதாவை தொடர்ந்து பாப்பி லகரி மரணமடைந்து சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 647

0

0