மனைவியுடன் அரபிக் குத்துக்கு Step போட்ட அட்லி..! Latest video..!

Author: Rajesh
20 February 2022, 7:10 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் ‘அரபிக் குத்து’ முதலிடத்தில் இருந்து வருகிறது. அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய் ஆடும் நடனம் ரசிகர்களது கவனத்தை பெற்று இருக்கிறது. மேலும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் நடனமும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

இந்நிலையில் உலகளவில் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.  இயக்குனர் அட்லியு தனது மனைவியுடன் அரபிக்குத்து டான்ஸ்க்கு குத்தாட்டம் போட்ட வீடியோவும் வைரலாகியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!