சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோ….அருண்ராஜா இயக்குநர்….போனி கபூர் தயாரிப்பாளர்: இணையத்தில் கசிந்த செய்திக்கு போனி கபூர் பதில்..!!

Author: Rajesh
20 February 2022, 7:50 pm
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாக கசிந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் போனி கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர். மேலும் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது பிரமாண்டமாக வெளியான வலிமை படத்தையும் போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தை இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் அதனை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போனி கபூர் தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

அதில் “ரஜினி சார் எனது பல வருட நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து கருத்துகளை பரிமாறிக் கொள்கிறோம். நாங்கள் இணைந்து பணியாற்றும் ஒரு படத்தை இறுதி செய்தால், அதை நான் தான் முதலில் அறிவிப்பேன். இதுபோன்ற தவறான செய்திகளை நீங்கள் பெற வேண்டியதில்லை என பதிவிட்டுள்ளார்.

Views: - 864

0

0