தொண்டாமுத்தூரைக் கைப்பற்றியது திமுக… பேரூர், சமத்தூர் உள்பட முக்கிய பேரூராட்சிகளிலும் வெற்றி…!!

Author: Babu Lakshmanan
22 February 2022, 11:36 am
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவே கைப்பற்றியுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுகவால் கைப்பற்ற முடியவில்லை. இந்தத் தேர்தல் மட்டுமல்லாது இதற்கு முன்பு நடந்த தேர்தலில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றி பெற்று வருகிறது. எனவே, கோவை மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது.

இந்த சூழலில், கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவுக்கு சவால் நிறைந்ததாக இருந்தது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு தேர்தல் நடந்தாலும், கோவையின் தேர்தல் முடிவுகளை பலரும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதில், பெரும்பாலான மாநகராட்சிகளில் திமுகவே முன்னிலை பெற்றுள்ளது. அதோடு, நிறைய பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளையும் அக்கட்சியே கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 489 பேரூராட்சிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் 50%க்கு மேலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

கோவை மாவட்டம் சமத்தூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8ல் திமுகவும், 4ல் காங்கிரசும் வெற்றி பெற்றது. வால்பாறை நகராட்சியை திமுக கைப்பற்றியது. 19 வார்டுகளில் தி.மு.க. வெற்றி, தலா ஒரு இடத்தில் அ.தி.மு.க.வும், சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர். பேரூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13ல் திமுகவும், 2ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி, 3 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

Views: - 819

1

0