700 க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு : உங்கள் மாவட்டத்தில் பாதிப்பு எத்தனை தெரியுமா..?

Author: kavin kumar
22 February 2022, 8:46 pm

சென்னை: தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 34,46,388 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 08 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,989 ஆக உள்ளது. கொரோனா பாதித்த 34,46,388 பேரில் இதுவரை 33,96,078 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னை 169 பேருக்கும், கோவையில் 96 பேருக்கும், செங்கல்பட்டில் 78 பேருக்கும், திருப்பூரில் 22 பேருக்கும், சேலத்தில் 25 பேருக்கும், ஈரோட்டில் 30 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…