போர் பதற்றத்தால் கடும் அச்சத்தில் உக்ரைன் மக்கள்: குடும்பம் குடும்பமாக மெட்ரோ சுரங்கப்பாதையில் பதுங்கும் நிலை..!!

Author: Rajesh
24 February 2022, 12:49 pm

மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்கவில்லை என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், உயர் துல்லியமான துல்லியமான ஆயுதங்களை கொண்டு ராணுவ மற்றும் விமான தளங்களை ரஷ்யா தாக்கி வருகிறது.

தாக்குதலில் பொதுமக்கள் மீது குறிவைக்கவில்லை எனவும் உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். வழக்கமாக குண்டு வீசப்படும்போதும் பதுங்கு குழிகளில் பதுங்கி இராணுவத்தினர், மக்கள் உயிர் பிழைப்பர். தலைநகரில் உள்ள மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

  • sara arjun as heroine 40 வயது ஹீரோவுக்கு ஜோடியான “தெய்வத்திருமகள்” நிலா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்!