கோவை அரசுப்பள்ளி மைதானத்தில் திடீர் தீவிபத்து: ரூ.2 கோடி மதிப்பிலான செயற்கை புல் ரோல் எரிந்து நாசம்..!!

Author: Rajesh
25 February 2022, 12:58 pm

கோவை: ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் வைத்திருந்த சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) ரோலில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 2 கோடி மதிப்பிலான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆண்கள் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்த மைதான பணிக்காக கொண்டுவரப்பட்ட சிந்தடிக் டர்ப் (செயற்கை புல்) மைதானத்தின் ஒரு பகுதியில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சிந்தடிக் டர்ப் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும் திடிரென தீப்பிடித்து பரவியது. இதனால் அந்த சிந்தடிக் டர்ப் பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 2 கோடி மதிப்பிளான சிந்தடிக் டர்ப் தீயில் எரிந்து நாசமானது.

  • tiruppur subramaniam shared the discussion to rb choudary about vijay movie விஜய்யை வைத்து தயவுசெய்து படம் எடுக்காதீங்க- தயாரிப்பாளரின் காதில் ஓதிய பிரபலம்! இதான் காரணமா?