பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் : வயிற்றுவலியால் துடித்த சிறுமி குழந்தை பெற்றதால் அதிர்ச்சி…!

Author: kavin kumar
27 February 2022, 7:26 pm

திருச்சி : திருச்சி அருகே பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் சின்ன பள்ளி பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன். விவசாயக் கூலித் தொழிலாளி. பாண்டியன் கூலி வேலைக்கு சென்ற இடத்தில் அங்கு வேலைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவியின் பாதுகாவலர்கள் மாணவியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. சற்று நேரத்தில் மாணவி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் காவேரி உத்தரவின்பேரில் போலீசார் மாணவியிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மாணவி கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற போது பாண்டியன் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பாண்டியனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…