சினிமா பட பாணியில் ரவுடியை சேஸிங் செய்து பிடித்த போலீசார் : கத்தியால் போலீசாரை குத்திய அதிர்ச்சி காட்சி வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 March 2022, 12:56 pm

கேரளா : திருவனந்தபுரம் அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை பிடிக்க முயலும் போது கத்தியால் குத்தி போலீசார் படுகாயமடைந்த நிலையில் ரவுடியை சேஸ் செய்து பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கால பகுதியை சேர்ந்தவர் அனஸ் ஜான். இவர் மீது கஞ்சா, அடி தடி, நாட்டு குண்டு வீச்சு என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இவரை போலீசார் தேடி வந்தனர்.

இநத் நிலையில் இவர் பாரிபள்ளி பகுதியில் உள்ள பாருக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன. இதை தொடர்ந்து அங்கு கல்லம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயன் தலைமையில் 4 பேர் சென்று அவரை பிடிக்க முயலும் போது அனஸ் ஜான் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார் .

இதை தொடர்ந்து அங்குள்ள சாலையோரம் சினிமா பட பாணியில் போலீசாரும் துரத்தி சென்றார். இந்த நிலையில் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீசியதால் எஸ்.ஐ ஜெயன் மற்றும் போலீசார் வினோத், ஸ்ரீ ஜித், சந்துரு ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தொடர்ந்து போலிசார் விடாது தூரத்தி பிடித்த நிலையில் போலீசார் துரத்தி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!